அதிரசம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கிலோ

வெல்லம் - 1/4 கிலோ

ஏலக்காய் - 5

நெய் - 3 மேசைக்கரண்டி

ரீபைண்ட் ஆயில் - 1/2 லிட்டர்

செய்முறை:

ஏலக்காயை தோல் நீக்கி பொடித்து வைக்கவும்.

அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி நீரை நன்கு வடித்து விட்டு ஈரமாக இருக்கும் போதே மிக்ஸியில் போட்டு திரித்து சல்லடையில் சலித்து மாவு தாயாரிக்கவும்.

மாவு ஈரமாக இருக்கும் போதே அடுப்பில் வாணலியை வைத்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வெல்லத்தை பொடித்து சேர்க்கவும்.

பாகு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து முத்துப் பதத்திற்கு பாகு வைக்கவும்.

பாகு பதத்திற்கு வந்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு கிண்ட வேன்டும்.

பிறகு ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

மாவு இருக்கமாக இருக்கக் கூடாது. சிறிது தளர இருக்க வேண்டும். மாவை உருண்டைய்யாக உருட்டினால் வெடிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, மாவை ஒரே உருண்டையாக உருட்டி சுற்றி நெய் தடவி அதில் போட்டு மூடி வைக்கவும்.

மறுநாள் மிதமான தீயில் எண்ணையை சூடாக்கவும்.

சிறிய எலுமிச்சையளவு மாவை உருண்டையாக உருட்டி பிறகு லேசாக தட்டி எண்ணையில் போட்டு பொறித்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

குறிப்புகள்: