வெண்டைக்காய் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 100 கிராம்

துவரம் பருப்பு - 50 கிராம்

தக்காளி - 50 கிராம்

பச்சைமிளகாய் - 4

வெங்காயம் - 50 கிராம்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

தாளிக்க:

பட்டை - 1

அன்னாசிப்பூ - சிறிது

கிராம்பு -1

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

மல்லித்தழை - தேவையான அளவு

செய்முறை:

பருப்பில் மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள் போட்டு குக்கரில் குழைய வேகவிடவும். வெண்டைக்காயை 2 இன்ச் அளவு நறுக்கவும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பிசுப்பிசுப்பு போக நன்கு வதக்கவும்.

வேறு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு காயை போட்டு பருப்பை ஊற்றி சூப்பிற்கு தேவையான தண்ணீரை ஊற்றி கொதித்தவுடன் உப்பு சேர்த்து மிளகுத்தூள் போட்டு இறக்கி சூப் பவுலில் மல்லித்தழையை கிள்ளி போடவும் பரிமாறவும்.

குறிப்புகள்: