வெஜிடபுள் க்ரெய்ன் சூப்
தேவையான பொருட்கள்:
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
காலிஃப்ளவர் - 100 கிராம்
வெண்டைக்காய் - 2
லீக்ஸ்/வெங்காயத்தாள் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
ஊறவைத்த கொண்டைக்கடலை - 1/2 கப்
ஊறவைத்த பயறு - 1/2 கப்
துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பட்டர் - 2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1 1/2 தேக்கரண்டி
சூப் க்யூப் - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். காய்கறிகளை விரும்பிய வடிவில் (நீளமாகவோ அல்லது சதுரமாகவோ) நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் காய்கறிகள், தக்காளி, கொண்டைக்கடலை, பயறு, துவரம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கடாயில் பட்டர் போட்டு உருகியதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்தவற்றைச் சேர்த்து, தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றி சூப் க்யூபைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
சூப் க்யூப் கரைந்ததும் கார்ன் ஃப்ளாரை கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கி சூப் பவுலில் ப்ரெட் டோஸ்ட்டுடன் பரிமாறவும்.
குறிப்புகள்:
விரும்பினால் ஒரு உருளைக்கிழங்கு சேர்க்கலாம்.
மிளகுக்கு பதிலாக பரிமாறும்போது மிளகுத் தூள் சேர்க்கலாம்.