சேமியா கஞ்சி (ஜுரத்திற்கு)
0
தேவையான பொருட்கள்:
வறுக்காத சேமியா - ஒரு கைப்பிடி
பால் - 1 டம்ளர்
ஏலக்காய் - 1
சர்க்கரை - 4 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை:
ஒரு கப் தண்ணீரில், ஏலம், உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
கொதி வந்ததும் சேமியாவை போட்டு இரண்டு நிமிடம் வேக விட்டு, பால், சர்க்கரை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.