சிக்கன் காய்கறி ஸ்பைசி சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 250 கிராம்

கேரட் - 2

பீன்ஸ் - 5

காளி ப்ளவர் - சிறிது

கோஸ் - சிறிது

சிறிய உருளைகிழங்கு - 2

வெங்காயம் - 1

சீரக பொடி - 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

பால் - 1 கப்

கார்ன் ஃப்ளார் - 3 தேக்கரண்டி

பட்டை - சிறிது

கிராம்பு - 2

ப்ரிஞ்சி இலை - சிறிது

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனையும் எல்லா காய்கறிகளையும் சிறியதாக நறுக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை-கிராம்பு-ப்ரிஞ்சி தாளித்து, சிக்கன் சேர்த்து வதக்கவும்.

எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கி, 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.

குக்கரை மூடி 5 அல்லது 6 விசில் விடவும்.

சூடு அடங்கியதும் திறந்து, பாலில் கார்ன் ஃப்ளாரை கரைத்து ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கி, உப்பு-மிளகு தூள் தூவி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: