கொரியன் ஜின்செங் சிக்கன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சூப்பிற்கு:

அளவில் சிறிய முழு கோழி (டெண்டெர் சிக்கன்) - 1

சிறியதாக கட் பண்ணிய இஞ்சி - 1/2 இன்ச் துண்டு

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

உலர்ந்த மலை எலந்தப்பழம் (ஜுஜுபி) - 2

ஜின்செங் வேர் - சிறியது

பெப்பர் பௌடர் - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 10 கப்

உப்பு - தேவைக்கு

அடைக்க (ஸ்டஃபிங்):

அரிசி - 1/2 கப் (ஸ்வீட் அண்ட் ஸ்டிக்கி ரைஸாக இருந்தால் நன்றாக இருக்கும்)

பூண்டு - 4 பல்

செஸ் நட் - 4

உலர்ந்த மலை எலந்த பழம் (ஜுஜுபி) - 3

ஜின்செங் வேர் - 2 - சுத்தம் செய்து சிறியதாக கட் பண்ணி கொள்ளவும்.

அலங்கரிக்க (கார்னிஷ்):

ஸ்ப்ரிங் ஆனியன் - 1 - வெட்டி வைத்துக்கொள்ளவும்.

முட்டை - 1 முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு இவைகளை தனித்தனியாக பிரித்து ஃப்ரை பண்ணி நீளவாக்கில் (சிறிய கீத்துகளாக) துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

அரிசியை கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

கோழியை (முழு கோழியாகவே) சுத்தம் செய்துவிட்டு, உட்புறமும், வெளிப்புறமும் சிறிது உப்பு தடவி 15- 20 நிமிடம் ஊற விடவும்.

பின் கோழியினுள் அரிசி மற்றும் அடைக்க கொடுத்துள்ளவற்றை வைத்து அடைத்து நூல் வைத்து தைத்து விடவும் அல்லது சிறிய மர குச்சி (பல் குத்த பயன்படுத்தப்படும்) கொண்டும் கேவிட்டியை மூடி விடலாம்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் கோழியை வைத்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, தீயை அதிகப்படுத்தி, எண்ணெய் பிரிந்து, பொங்கி வரும் வரை கொதிக்க விடவும்.

பின் தீயை குறைத்து, அரிந்த இஞ்சி துண்டுகளை சேர்த்து, ஒரு மணி நேரம் வேக வைக்கவும்.

பின் இஞ்சி துண்டுகளை எடுத்து விட்டு, பூண்டு, ஜின்செங்கின் சிறிய வேர், மலை இலந்தை இவைகளை சேர்த்து மேலும் 30 நிமிடம் கொதிக்கவிடவும். தண்ணீர் தேவையெனில் சுடு தண்ணீர் சேர்க்கவும்.

இறக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் நல்லெண்ணெயை சேர்க்கவும்.

பின் தயாராக வைத்திருக்கும் முட்டை கீத்து மற்றும் பொடியாக அரிந்த ஸ்ப்ரிங் ஆனியனால் அலங்கரித்து சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்:

சூப் அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். தேவையெனில், மிளகு தூளும், உப்பும் சேர்த்து சாப்பிடலாம், சுவை கூடுதலாக இருக்கும்.

தேபோல், கோழி துண்டுகளை (போர்க் கொண்டு எடுத்தால், ஈஸியாக பிரிந்து வரும், ரொம்ப ஷாஃப்ட்டா இருக்கும் சாப்பிட) யும் (அப்படியே சாப்பிடலாம்) கூடுதல் சுவைக்காக உப்புடன் கலந்த வறுத்த வெள்ளை எள்ளுடனும் சாப்பிடலாம்.