காரட் சூப் (1)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

காரட் - 400 கிராம்

வெங்காயம் - 1

பயத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

பால் - 1 டீ கப்

மிளகு பொடி - 1/2 தேக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

காரட் மற்றும் வெங்காயத்தையும் பெரிதாக நறுக்கவும்.

இத்துடன் 3 டீ கப் தண்ணீர் மற்றும் பயத்தம் பருப்பையும் சேர்த்து குக்கரில் 1 விசில் வைத்து எடுக்கவும்.

பருப்பு வெந்தபின் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக மசிக்கவும்.

பாலை நன்றாக காய்ச்சவும்.

காய்ச்சிய பின் காரட்-பருப்பு கலவையை இதில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

உப்பு-மிளகு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: