ஈஸி வெஜ் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காரட், கோஸ், குடை மிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன் - 1 கப்

சேமியா - சிறிது

பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - தேவைக்கேற்ப

சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி

மல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

காய்கறிகளை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி, உப்பு, மல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், சேமியா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக விடவும். ஈஸி வெஜ் சூப் ரெடி.

மிளகு தூள் தூவி சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: