ஆட்டுக்கால் சூப் (2)
0
தேவையான பொருட்கள்:
நன்றாக சுத்தம் செய்த ஆட்டுக்கால் - 4 என்னம்
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 20 என்னம்
பூண்டு - 3 என்னம்
பச்சை மிளகாய் - 2 என்னம்
விளக்கெண்ணைய் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சீரகம்,வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாயை தட்டிக்கொள்ள வேண்டும்.
ஆட்டுக்காலை வேக வைக்கும் போது தட்டியதை எல்லாம் போட்டு விளக்கெண்ணையை ஊற்றி கலக்கி உப்பு போடவும்.
பின் ஆட்டுக்கால் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைக்கவும்.
20 நிமிடம் கழித்து திறந்து சூப் பவுலில் பரிமாறவும்.
குறிப்புகள்:
தேவையெனில் மிளகுத்தூள் போட்டுக்கொள்ளலாம்.