3 in 1 இறால் அடை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1/4 படி
நாட்டு வெங்காயம் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 4
இறால் - 1/2 கிலோ
தேங்காய் - 1/2 மூடி
கிராம்பு, பட்டை, சீரகம், சோம்பு - சிறிது
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை கழுவி காய வைக்கவும்.
காய்ந்ததும் மிக்சியில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
இறாலை சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள், கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
கிராம்பு, பட்டை, சீரகம், சோம்பு அனைத்தையும் வெறும் சட்டியில் போட்டு சிறிது நேரம் வருக்கவும்.
வருத்ததை மிக்சியில் பொடி செய்யவும்.
வெந்த இறாலை லேசாக நசுக்கி கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி அனைத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
தேங்காயை துருவவும்.
அரிசி மாவுடன் அனைத்து பொருளையும் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு,மஞ்சள் போட்டு பிசையவும்.
இந்த கலவையை சிறிது நேரம் ஊற விடவும். இதை கொழுக்கட்டை போல் பிடித்து இட்லி சட்டியில் வைத்து வேக விடலாம்.
அல்லது அடை போல் தட்டி தோசை கல்லில் ஊற்றி வேக விடலாம். அல்லது கேக் வட்டியில் ஊற்றி ஓவனில் வைத்து வேக விட்டு துண்டுகள் போடலாம்.சுவையான 3 இன் 1 இறால் அடை தயார்.