வெஜ் புரோட்டின் ஊத்தப்பம்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தோசைமாவு -1 கப்

முளைகட்டிய பயறு -1/2 கப்

இஞ்சி -1 சிறுதுண்டு

காய்ந்தமிளகாய் -1

கறிவேப்பிலை - சிறிது

துறுவிய கேரட் - 1/4 கப்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1

கொத்தமல்லிதழை - சிறிது

எண்ணை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முளைகட்டிய பயறு,இஞ்சி,மிளகாய்,கறிவேப்பிலை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

தோசைமாவுடன் அரைத்த பயறு,கேரட் துறுவல்,வெங்காயம்,கொத்தமல்லிதழை,தேவையான உப்பு போட்டு கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில்வைத்து சூடானவுடன் எண்ணை சிறிது தடவி கலந்துவைத்தமாவில் ஒருகரண்டி ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.

சிறிதுவெந்ததும் திருப்பி போட்டு சிறிது எண்ணை ஊற்றி வெந்தவுடன் எடுத்து சட்னி,சாம்பாருடன் சாப்பிடவும்.

குறிப்புகள்: