வெஜிடபுள் சீஸ் தோசை
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - ஒரு கப்
காலிஃப்ளவர் - பாதி அளவான பூ
காரட் - 2
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சைப் பட்டாணி - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய சீஸ் துண்டுகள் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
காலிஃப்ளவரை சிறிதாக உதிர்த்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைக்கவும். உருளைக்கிழங்கை ஃபிங்கர் சிப்ஸ் வடிவில் நறுக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். காலிஃப்ளவர், காரட், பட்டாணி ஆகியவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (அனைத்து காய்களையும் கிழங்கு உட்பட - இட்லி தட்டில் ஒரே ஈட்டில் வேகவைத்து எடுக்கலாம்).
அடுப்பில் தோசைக் கல்லை காயவைத்து, தோசை மாவை எடுத்து சற்று கனமான தோசையாக ஊற்றவும். (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
வேக வைத்த காய்கறிகளையும், நறுக்கிய தக்காளியையும் தோசை மேல் தூவி அலங்கரிக்கவும். பிறகு சீஸ் துண்டுகளையும் மேலே தூவவும்.
தோசையை மூடி போட்டு, மிதமான தீயில் அப்படியே வேகவிடவும். (திருப்பிப் போட வேண்டாம்). காய்கறிகள் ஏற்கனவே வெந்திருப்பதால். சீஸ் முழுவதும் உருகிவிடாமல் லேசாக சூடாகி, மென்மையாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான வெஜிடபுள் சீஸ் தோசை தயார். தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.