வெஜிடபுள் ஓட்ஸ் இட்லி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்

கோதுமை ரவை - 1 கப்

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி, கோஸ் - 1 கப்

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 2

நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிது

தயிர் - 1 கப்

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி

முந்திரி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

ரவை, ஓட்ஸ், தயிர் மூன்றையும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய காய்களைச் சேர்த்து வதக்கி எடுத்து, மாவுக் கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

சுவையான வெஜிடபுள் ஓட்ஸ் இட்லி தயார்.

குறிப்புகள்:

கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.