வெஜிடபுள் ஊத்தப்பம்

on on on off off 9 - Good!
3 நட்சத்திரங்கள் - 9 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - ஒரு கப்

கரம் மசாலா - 2 தேக்கரண்டி

கேரட் - 3

பீன்ஸ் - 5

முட்டைகோஸ் - கால் பங்கு

வெங்காயம் - 1

கொத்தமல்லி - சிறிதளவு

கடுகு - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தையும், பீன்ஸையும் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டையும், கோஸையும் துருவி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயத்தையும், பீன்ஸையும் போட்டு சிறிது நீர் தெளித்து வேக விடவும்.

பீன்ஸ் பாதி வெந்ததும், துருவிய கேரட், கோஸ் சேர்த்து பாதி வேகும் வரை வதக்கவும். பின் உப்பு மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.

வதக்கிய கலவையை எடுத்து தட்டில் வைத்து நன்கு ஆற விடவும்.

பின் தோசைக் கல் காய்ந்ததும் அதில் சிறிது மொத்தமாக தோசை ஊற்றி, அதன் மேல் இந்த வதக்கிய கலவையை போட்டு தோசைக் கரண்டியால் எல்லா இடங்களிலும் பரப்பி விடவும். திருப்பி போட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

தயார். சட்னி, சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.