வெங்காய ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 4 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் - 2 கப்
பொடியாக அரிந்த பச்சைக்கொத்தமல்லி - தேவையான அளவு
தோசை மிளகாய்ப் பொடி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை தனியாக ஊற வைக்கவும்.
உளுத்தம்பருப்பையும், வெந்தயத்தையும் ஒன்றாக ஊற வைக்கவும்.
3 மணி நேரம் ஊறியதும் அரிசி, உளுந்து, வெந்தயம் (உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து) மூன்றையும் அரைக்கவும். வெண்ணையாக மாவு அரைந்ததும் எடுத்து உப்பு போட்டு கலந்து மூடி வைக்கவும்.
காலையில் தோசை வார்க்க வேண்டுமானால் முதல் நாள் மாலையிலேயே அரைத்து வைக்க வேண்டும். மாவு சற்றுப் புளித்தால்தான் ஊத்தப்பம் நன்றாக இருக்கும்.
தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றிக் கல் காய்ந்ததும் மாவை வட்டமாக ஊற்றிப் பரத்தி அதன் மேல் பொடியாக அரிந்து வைத்த வெங்காயம், கொத்தமல்லியைக்கலந்து தூவவும்.
இட்லி மிளகாய்ப் பொடியை மேலே அவரவர் விருப்பத்திற்கேற்ப தூவி நல்லெண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னியும், வெங்காய சாம்பாரும் அருமையான காம்பினேஷன்.