ரைஸ் தோசை

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சாதம் - 1 கப்

கோதுமை மாவு - 4 தேக்கரண்டி

ரவை - 3 தேக்கரண்டி

பீன்ஸ் - 50 கிராம்

கேரட் - 50 கிராம்

முட்டைகோஸ் - 50 கிராம்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சாதத்தை மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அரைத்த சாதத்துடன் கோதுமை மாவு, ரவை, நறுக்கிய காய்கறிகள், உப்பு, மிளகாய்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

தோசைக்கல் நன்கு காய்ந்த பின் மாவை அடை போல் தட்டி, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: