ரவா தோசை
3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவை - 3/4 டம்ளர்
மைதா - 1/4 டம்ளர்
அரிசி மாவு - 1 டம்ளர்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
சீரகம், மிளகு - தேவைகேற்ப (ஒரு தேக்கரண்டி)
கேரட் - 1
கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை:
வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். சீரகம், மிளகை தட்டி பொடித்து வைக்கவும். கொத்தமல்லியும் சிறிதாக ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
தேவையான மாவு மற்றும் ரவையுடன் வெங்காயம், கேரட், மிளகாய், மல்லி மற்றும் தட்டி பொடித்த சீரகம், மிளகுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதத்தைவிட கொஞ்சம் தண்ணியாக கரைத்துக் கொள்ளவும்.
தோசை கல்லை காய வைத்து மாவை பரவலாக ஊற்றி தேய்க்காமல் அப்படியே வேக வைத்து எடுக்கவும். சுவையான ரவா தோசை ரெடி.