முட்டை சாண்ட்விச்

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஹம்பேகர் பன் - 2

முட்டை - 1

வெங்காயப் பவுடர் (விரும்பினால்) - சிறிது

ஐஸ் பேர்க் லெட்டியூஸ் இலை - தேவையான அளவு

மயோனைஸ் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

லெட்டியூஸ் இலையை மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மயோனைஸோடு வெங்காயப் பவுடரை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஹம்பேகர் பன்னை டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஹம்பேகர் பன்னின் அடிப்பாகத்தில் மயோனைஸ் கலவையில் பாதியை பூசிக் கொள்ளவும்.

அதன் மேல் பாதி முட்டையை சீவி, அத்துண்டுகளை பரப்பி வைக்கவும்.

முட்டைத் துண்டுகளின் மேல், மெல்லியதாக நறுக்கி வைத்திருக்கும் லெட்டியூஸ் இலையில் சிறிதை வைக்கவும்.

அதன் மேல் பன்னின் மேல் பகுதியை வைத்து மூடிக் கொள்ளவும்.

குறிப்புகள்:

விரும்பினால் வெங்காயம், தக்காளி சேர்த்துக் கொள்ளவும்