மாங்காய் இஞ்சி பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
சிறிய மாங்காய் - 1
இஞ்சி - பெருவிரல் அளவு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் (அல்லது) நெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசி மற்றும் பாசிப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
மாங்காய் மற்றும் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊறிய அரிசி மற்றும் பருப்புடன் மாங்காய், இஞ்சி, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி (3 1/2 கப் தண்ணீர் ஊற்றினால் போதும்) பாதி மிளகு சேர்த்து குக்கரில் போட்டு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மீதமுள்ள மிளகு மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து பொரித்து வைக்கவும்.
வேக வைத்தவற்றில் பொரித்த கலவையைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
குறிப்புகள்:
சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்.
விருப்பப்பட்டால் நெய், முந்திரி, திராட்சை சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்தால் இன்னும் அதிகச் சுவையாக இருக்கும்.