மஷ்ரூம் கிச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மஷ்ரூம் - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

ரவை (அல்லது) கோதுமை ரவை - 2 கப்

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை

கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, மிளகாய் எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

கடைசியாக மஷ்ரூம் சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் சிறுந்தீயில் வைத்து ரவையை கொட்டி கலந்து மூடி விடவும்.

நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும்.

குறிப்புகள்: