மஞ்சூரியன் இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லி - 10
பெரிய வெங்காயம் - 2
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயத் தாள் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
கார்ன் ஃப்ளார் மாவு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், வெங்காயத் தாளை மிகவும் பொடியாக நறுக்கவும்.
இட்லிகளை சிறு சதுரங்களாக நறுக்கி, நன்கு காய்ந்த எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்க்கவும்.
அத்துடன் பொரித்த இட்லிகளை சேர்த்து, கார்ன் ஃப்ளார் மாவை 1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
நன்கு கெட்டியானதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, வெங்காயத் தாள் சேர்த்து கிளறி இறக்கவும்.