மசாலா பஜ்ஜி இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி - 2

கடலை மாவு - 1/2 கப்

மிளகாய் தூள் - 3 1/2 தேக்கரண்டி

வெங்காயம் - 1 கப் ( பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 ( நீளமாக கீறியது)

தக்காளி - 2 ( நறுக்கியது)

கொத்தமல்லி தழை - 1 தேக்கரண்டி( பொடியாக நறுக்கியது)

தனியா தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 3 சிட்டிகை

எண்ணைய் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தோசைக்கல்லை காயவைத்து இட்லியை போட்டு ஒரு தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி திருப்பி திருப்பி போட்டு சிவக்கும் அளவு பொரித்து பின் எடுத்து தனியாக வைக்கவும்.

பின் இட்லியை 4 அல்லது 6 பீஸாக கத்தியால் நறுக்கி துண்டமாக்கவும்.

கடலைமாவில் சிறிது உப்பு சேர்த்து மிளகாய் பொடி 1 1/2 தேக்கரண்டி போட்டு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

துண்டுகளாக்கிய இட்லியை பஜ்ஜி மாவில் போட்டு பொரித்தெடுக்கவும்.

வாணலியில் எண்ணைய் 2 தேக்கரண்டி காயவைத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி உப்பை போடவும்.

இதனுடன் தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், போட்டு ஒரு வதக்கு வதக்கி இரண்டு கையளவு தண்ணீர் தெளித்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.

பின் பொரித்த பஜ்ஜியை சேர்த்து மீண்டும் ஒரு வதக்கு வதக்கி கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பறிமாறலாம். மசாலா பஜ்ஜி இட்லி ரெடி.

குறிப்புகள்: