மசாலா தோசை (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - தேவையான அளவு

உருளைக்கிழங்கு - 5

வெங்காயம் - 3

இஞ்சி - ஒரு சிறு துண்டு

மிளகாய் - 4

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து ,தோல் உறித்து அரைகுறையாக உதிர்த்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி போட்டு தாளித்து, சிறிது தண்ணிர் விட்டு லேசாக வெங்காயத்தை வேகவிடவும்.மஞ்சள் தூளும் உப்பும் சேர்த்து கொள்ளவும்.

தண்ணிர் சற்று வத்தியதும் உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி சற்று புரட்டினார் போல் கிளறி வைக்கவும்.

தோசை கல்லில் தோசையை மாவை ஊற்றிநைசாக விரித்து,திருப்பி போட்டுபின் எடுக்கும் சமயம் பாதி தோசையில்ஒரு கரண்டி மசால் கிழங்கை விரித்து வைத்து,மறுபாதி தோசையினால் மூடி பரிமாரவும்.

குறிப்புகள்: