புளிப்பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 2 கப்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
நிலக்கடலை - 1 தேக்கரண்டி
மிளகாய்வத்தல் - 7
பச்சைமிளகாய் - 2
மஞ்சத்தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீரை வடிய வைக்கவும்.
மேற் சொன்ன மற்ற தேவையான பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.
புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு ப்ரெஷர் பேனை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயை ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களைப் போடவும். நன்கு சிவந்ததும் அரிசியைப் போட்டு ஈரம் போகும் வரை வறுக்கவும்.
நன்கு வாசம் வந்ததும் புளியை கரைத்து விடவும். 2 கப் அரிசிக்கு 4கப் புளித்தண்ணீர் வரும்படி கரைத்து விடவும். மேலாக உப்பைத் தூவி வெல்லத்தையும் பொடித்துத்தூவி கறிவேப்பிலையும் கிள்ளி போட்டு நன்கு கிளறி விடவும்.
குக்கரை மூடி 4 அல்லது 5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு ப்ரெஷர் பேனைத் திறந்தால் சூடான சுவையான புளிப்பொங்கல் தயார்.