பீர்க்கங்காய் அடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் - 2 (நடுத்தரமானது),

கடலை மாவு - 100 கிராம்,

அரிசி மாவு - 200 கிராம்,

பச்சை மிளகாய் - 5,

சின்ன வெங்காயம் - 10,

தேங்காய் துருவல் - 1/4 மூடி,

கொத்துமல்லி - சிறிது,

கறிவேப்பிலை - சிறிது.

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க:-

கடுகு - 1/2தேக்கரண்டி,

கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி,

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,

செய்முறை:

பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், பீர்க்கங்காய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றை மாவு, உப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

தோசைக்கல்லை காய வைத்து, சிறு சிறு அடைகளாக தட்டி, சுற்றி எண்ணெய் விட்டு, திருப்பி வேக விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: