பாசிப்பருப்பு தோசை
0
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 5
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்புடன் சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் சீரகம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். மாவு புளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடனேயே ஊற்றலாம்.
குறிப்புகள்:
வெஜிடபிள் குருமா இதற்கு பொருத்தமான பக்க உணவு.