பழம்பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நேந்தரம் பழம் - 1

மைதா மாவு - 1 கோப்பை

அரிசிமாவு - 1/4 கோப்பை

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

சர்க்கரை - 2 தேக்கரண்டி

ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்புத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

மைதாவுடன் அரிசிமாவையும் நன்கு கலக்கவும். அதனுடன் எண்ணெயைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டு ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி சற்று கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

பிறகு பழத்தின் தோலை நீக்கி விட்டு நீளவாக்கில் அல்லது பிடித்தமான வடிவத்தில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு சற்று குழிவான எண்ணெய் சட்டியில் எண்ணெயை நன்கு காயவைத்து பழ வில்லைகளை மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்:

சூடாக இல்லாமல் சற்று ஆறிய பிறகு சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.