நவதானிய தோசை (1)
0
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - 1 கைப்பிடி
பச்சை பயிறு - 1 கைப்பிடி
கொண்டைக்கடலை - 1 கைப்பிடி
துவரம்பருப்பு - 1 கைப்பிடி
காய்ந்த சோயாபீன் - 1 கைப்பிடி
காராமணி - 1 கைப்பிடி
கடலைபருப்பு - 1 கைப்பிடி
கேழ்வரகு - 1 கைப்பிடி
மிளகாய்வற்றல் - 2
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, எல்லா தானியங்களையும் ஒன்றாக கலந்து கழுவி 6 மணிநேரம் ஊறவிடவும். ஊற வைத்த தானியங்களுடன் உப்பு தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
தோசை வார்ப்பதற்கு முன் உப்பு கலந்து மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.