நவதானிய தோசை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
கொள்ளு - 2 ஸ்பூன்
கொண்டை கடலை - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
பாசி பருப்பு - 1 தேக்கரண்டி
காரா மணி - 1 தேக்கரண்டி
பட்டாணி பருப்பு - 1 தேக்கரண்டி
மொச்சை பயறு - 1 தேக்கரண்டி
வேர்கடலை - 1 தேக்கரண்டி
முந்திரி - 10
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - 1 இனுக்கு
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்து, அரிசியை இரண்டையும் கழைந்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
மொச்சை பயிறு, கொண்டைக்கடலை,கொள்ளு,காராமணி இவைகளை கழுவி இரவே ஊறவைக்கவும்.
மீதி பருப்புகளை (முந்திரி, வேர்கடலை தவிர) 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
முந்திரி, வேர்கடலை இவற்றை சிவக்க வறுத்து ரவை போல பொடிக்கவும்.
பின் இவைகளை உப்பு சேர்த்து ஒன்றாக சேர்த்து நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கி தோசையாக வார்க்கவும். எண்ணைய் ஊற்றி திருப்பி போடவும். பறிமாறும் போது பொடித்த பருப்பு பொடிகளை தூவி கொடுக்கவும்.