தோசை உப்புமா (1)
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தோசை - 5
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 4 இலை.
கடுகு - தாளிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தை சிறிதாக வெட்டி கொள்ளவும்.
தோசையினை சிறு சிறு துண்டுகளாக நீளமாக வெட்டி கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு நீளமாக வெட்டி வைத்துள்ள தோசைகளை இத்துடன் சேர்த்து 5 நிமிடம் கிளறிவிடவும்.