திருவாதிரை அடை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கிலோ
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய் - 6
கருப்பு எள் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 டம்ளர்
தேங்காய் (விருப்பப்பட்டால்) - 1/4 மூடி
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரியை கழுவி, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்னீர் வடித்து ஒரு துணியில் உலர விட வேண்டும்.
கையில் ஒட்டாத பதம் உலர்ந்ததும், மிக்ஸியில் போட்டு அரைத்து நைஸ் ரவை பதத்திற்கு சலித்து மாவு தயாரிக்கவும்.
தயாரித்த மாவை வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும்.
எள்ளை கழுவி, கல் அரித்து வெறும் வாணலியில் போட்டு பொரியும் வரை வறுத்து மாவில் சேர்க்கவும்.
ஏலக்காயை பொடித்து மாவில் சேர்க்கவும்.
தேங்காய் சேர்ப்பவர்கள், தேங்காயை துருவி, சிவக்க வறுத்து மாவில் சேர்க்கவும்.
வெல்லத்தை பொடித்து, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, திரும்ப அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
பாகு கொதித்ததும் (ரொம்ப காய்ச்ச கூடாது. சளசளன்னு கொதிக்கும் போது எடுக்கணும்) இறக்கி மாவில் ஊற்றி கரண்டியால் கிளறவும்.
சிறிது சூடு ஆறியதும், கையில் நெய் தொட்டுக் கொண்டு மாவை நன்கு பிசைந்து, (சப்பாத்தி மாவு போல்) எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
வாழை இலையில் அல்லது பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவிக் கொண்டு உருண்டைகளை வட்டமாக தட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மூன்று, நான்கு அடைகளாக போட்டு சுற்றிலும் நெய் விட்டு இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
2 - 3 நாட்களுக்கு கூட கெடாமல் இருக்கும்.