தினை அரிசி உப்புமா
தேவையான பொருட்கள்:
தினை அரிசி - 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம் - தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தினை அரிசியை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதிக்கத் துவங்கியதும் தினை அரிசியைச் சேர்த்து கலந்து, மீண்டும் கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து வேகவிடவும். அரிசி (தண்ணீரை ஈர்த்து) வேகத் துவங்கியதும் ஒரு முறை கிளறிவிட்டு சிறு தீயில் வைத்து மூடி வேகவிடவும்.
குறிப்புகள்:
ரவை போல இல்லாமல் அரிசி வேக சற்று அதிகமாக தண்ணீர் தேவைப்படும்.