தாளித்த இட்லி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லிமாவு - 2 கப்

சின்னவெங்காயம் - 8

காய்ந்தமிளகாய் -1

கறிவேப்பிலை - சிறிது

எண்ணை -1 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு -1 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

மிளகாயை பொடியாக கிள்ளிவைக்கவும்.

கறிவேப்பிலையும் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு பருப்புகளை போட்டு வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் எடுத்து மாவில் கொட்டி கலக்கவும்.

மாவை இட்லிதட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: