தக்காளி ரவா தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை ரவை - 1/4 கப்

அரிசி மாவு - 1 கப்

மோர் - 1/2 தேக்கரண்டி

தக்காளி விழுது - 2 தேக்கரண்டி

மிளகு சீரக பொடி - 1/4 தேக்கரண்டி

பெருங்காய பொடி - 1/4 தேக்கரண்டி

காரத்தூள் - 1/4 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

நெய் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி விழுது அல்லது ஒரு பெரிய தக்காளியை அரைத்து வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, தக்காளி விழுது, காரத்தூள், உப்பு போட்டு வைக்கவும்.

ஒரு கடாயில் நெய், எண்ணெய் விட்டு அதில் மிளகு சீரக தூள், பெருங்காய தூள், இஞ்சி எல்லாவற்றையும் போட்டு தாளிக்கவும்.

அதை இந்த மாவில் கொட்டி நன்றாக மோர், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலந்து 15 நிமிடம் ஊற வைத்து ஊற்றி தோசை சுடவும்.

குறிப்புகள்: