தக்காளி தோசை (7)
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி (அ) இட்லி அரிசி - 2 டம்ளர்
பச்சரிசி - 1/2 டம்ளர்
தயிர் - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 4
காய்ந்த மிளகாய் - 6 (காரத்திக்கேற்ப)
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 4 பற்கள்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் + நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசிவகைகளை களைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
தக்காளியை நான்காக நறுக்கி மிக்ஸியில் லேசாக கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், வெங்காயத்தையும் கொர கொரப்பாக திரித்து கொள்ளவும்.
இப்போது ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு அதனுடன் தக்காளி கலவை, கொர கொரப்பாக திரித்தது அனைத்தையும் போட்டு நன்கு ஆட்டவும், தேங்காய் துருவலையும் சேர்த்து ஆட்டவும்.
நல்லா எல்லா கலவையும் சேர்ந்து மையாக அரைந்ததும் அதில் தயிர், உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
ரொம்ப புளிக்க தேவையில்லை காலையில் அரைத்து இரவு டிபனுக்கு சுடலாம்.