தக்காளி தோசை (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

தோசை அரிசி - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - 2 கப்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - சிறிதளவு

சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, தோசை அரிசி, உளுத்தம் பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின் அரைக்கவும்.

அரிசியும், பருப்பும் நன்கு அரைந்தவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு போட்டு அரைக்கவும்.

பிறகு மிளகாய் தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்க்கவும்.

பின் சூடான தோசைக்கல்லில் மெலிதாக விட்டு எண்ணெய் ஊற்றி சுடவும்.

குறிப்புகள்:

தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.