டூ இன் ஒன் இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 4 கப்
சிவப்பு சட்னிக்கு:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
மிளகாய்வற்றல் - 6
புளி - 1 சிறிய துண்டு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பச்சை சட்னிக்கு:
மல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய்த் தாளிக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, புளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு எடுத்து சற்று நேரம் ஆற வைத்து, அரைத்து எடுக்கவும்.
மல்லித்தழை, தேங்காய், பச்சைமிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்.
இட்லி மாவை இட்லிகளாக ஊற்றி, வெந்ததும் எடுத்து ஆறவிட்டு, ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக்கி அந்தத் துண்டுகள் ஒவ்வொன்றையும் மூன்று பாகங்களாகக் கீறி இடையில் சிவப்பு, பச்சை சட்னிகளைத் தடவவும் பரிமாறவும்.