டால் ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு (குவித்து எடுக்கவும்) - 1 கப்

பயற்றம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி

துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கின இஞ்சி - 1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கின பச்சைமிளகாய் - 1 தேக்கரண்டி

நறுக்கின வெங்காயம் - 2 மேசைக்கரண்டி

நறுக்கின கொத்தமல்லித் தழை - 1 மேசைக்கரண்டி

ஓமம் - 1 தேக்கரண்டி

நெய் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அனைத்து பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து, கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

அதில் மஞ்சள்தூள், இரு மடங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து சுமார் இரண்டு விசில்கள் வரும்வரை வேக வைத்து எடுக்கவும்.

வெந்ததும் இறக்கி, நீரை முழுவதும் வடித்து விடவும். அதனை ஆறவிட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.

அத்துடன் நறுக்கின வெங்காயம், நெய் உட்பட மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். மாவினை சுமார் 15 நிமிடங்கள் ஊற விடவும்.

பிறகு ரொட்டிகளாக தேய்த்து, தவா அல்லது தோசைக்கல்லில் போட்டு, சிறிது நெய் விட்டு, இரண்டு புறமும் பொன்னிறமாக மாறும் வரை வேக வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்:

ஊறுகாய், தயிருடன் பரிமாறவும்.