ஜவ்வரிசி மோர் உப்புமா

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 150 கிராம்

மோர் - ஒரு கப்

மோர் மிளகாய் - 3

கடுகு - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் - சிறு குண்டுமணி அளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி

கல் உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஜவ்வரிசியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு அதில் மோரை ஊற்றி இரண்டையும் ஒன்றாக கலந்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து மோர் மிளகாயை போட்டு வதக்கவும்.

அதன் பிறகு அதனுடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு மோருடன் ஊற வைத்த ஜவ்வரிசியை தாளித்தவற்றுடன் போட்டு நன்கு எல்லாம் ஒன்றாகும்படி கிளறி விடவும்.

பின்னர் பொரித்து வைத்திருக்கும் பெருங்காயத்தை பொடி செய்து உப்புமாவில் சேர்த்து கிளறி, மூடி வைத்து 4 நிமிடம் வேக வைக்கவும்.

4 நிமிடம் கழித்து உப்புமா வெந்ததும் மூடியை திறந்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு பொலபொலவென்று ஆனதும் இறக்கி வைத்து விடவும். ஜவ்வரிசி ரொம்ப கெட்டியாக இருந்தால் கால் கப் தண்ணீர் சேர்த்து கிளறி 3 நிமிடம் மூடி வைத்து வெந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்:

இதனை நைலான் ஜவ்வரிசியை வைத்து செய்யவும்.