ஜவ்வரிசி உப்புமா

on on on off off 6 - Good!
3 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

நைலான் ஜவ்வரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/4 கப்

பச்சை மிளகாய் - 1

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 1/4 கப்

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம் - தாளிக்க தேவையான அளவு

மல்லி, கறிவேப்பிலை - தேவைக்கு

செய்முறை:

ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற விடவும். ஊறிய ஜவ்வரிசியை எடுத்து ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீரை வடியவிட்டு அப்படியே வடிகட்டியிலேயே வைத்திருக்கவும்.

பாசிப்பருப்பை மலர வேக விட்டு எடுத்து வைக்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், தாளித்து பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.

வடிகட்டி வைத்திருக்கும் ஜவ்வரிசியை வாணலியில் போட்டு கிளறி விடவும். உப்பு போடவும். தண்ணீர் சேர்க்கக்கூடாது.

ஜவ்வரிசியை விரலில் எடுத்து நசிக்கி பார்த்தால் நசுங்க வேண்டும். இப்போது உடைத்த கடலை, பாசிப்பருப்பு, மல்லி இலை சேர்த்து இறக்கவும்.

குறிப்புகள்: