சைனீஸ் நூடுல்ஸ் (2)
தேவையான பொருட்கள்:
அரிசி நூடுல்ஸ் பாக்கெட் - 400
இறால் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
செலரி அரிந்தது - 1 கப்
கேரட் - 1
முளைக்கட்டிய சோயா அல்லது பச்சை பயறு - 200 கிராம்
வெங்காய தாள் (பொடியாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
சன்ஃபிளவர் ஆயில் - 2 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
சைனீஸ் எள் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும், கேரட்டை துருவிக் கொள்ளவும்.
செலரியை பொடியாக நறுக்கவும். வெங்காய இலைகளையும் பொடியாக நறுக்கவும். (காய்கறிகளை எப்பொழுதும் அரியும் முன்பே கழுவிக் கொள்ளவும் இதனால் அதன் சத்து வீணாகாது)
பின்பு ஒரு பெரிய சட்டியில் 3/4 பாகம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும், கொதி வந்த பின்பு நூடுல்ஸை அதில் போடவும், 3 நிமிடங்கள் வெந்த பின்பு வடிகட்டவும், அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு அலசிவிடவும்.
நீர் வடிந்தபின்பு சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அனைத்திலும் படுமாறு தடவி வைக்கவும்.
மேலும் வாயகன்ற ஒரு நாண் ஸ்டிக் சட்டியில் சன்ஃப்ளவர் ஆயில் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின்பு இறாலை போடவும், 30 வினாடி வதக்கி மேலும் முளைக்கட்டிய சோயா, கேரட், செலரி, ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறவும்.
பின்பு அதில் சோயா சாஸ் விட்டு நன்றாக கிளறவும். லேசான தீயில் அடிப்பிடிக்காமல் வேக விடவும்.
பின்பு அஜினோமோட்டோ சேர்க்கவும்(நீர் சேர்க்கக்கூடாது), காய் அனைத்தும் வெந்த பிறகு நூடுல்ஸை போட்டு நன்றாக கிளறவும்.
கடைசியாக வெங்காய இலை, எள் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும், இதுவே சைனீஸ் நூடுல்ஸ்.