சிக்கன் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்:
கோழி - 1 கிலோ
நூடுல்ஸ் - 500 கிராம்
காரட் - 2
லீக்ஸ் - 1
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 4
முட்டை - 4
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அது கொதித்ததும் கோழியை வெட்டாமல் உப்பு சேர்த்து அவிக்கவும்.
கோழி வெந்ததும் எடுத்து ஆறவிடவும்.
பின்பு தோல், எலும்பை நீக்கி தசையை மட்டும் எடுத்து உதிர்த்திக் கொள்ளவும்.
உதிர்த்த சிக்கனுக்கு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
காரட்டை துருவிக் கொள்ளவும். லீக்ஸ்ஸை பொடியாக அரிந்து கொள்ளவும்.
வெங்காயத்தை மெல்லிய நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நூடுல்ஸை தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு உப்பு, மிளகாய்த்தூள் பிரட்டி வைத்த சிக்கனை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு சிறிதளவு எண்ணெய் விட்டு காரட், லீக்ஸினை உப்பு சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வரும் போது பச்சை மிளகாய், முட்டையை அடித்து ஊற்றி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.
தயாரித்து வைத்துள்ள நூடுல்ஸின் மேல் பொரித்த சிக்கின், வதக்கிய காரட், வறுத்த முட்டை வெங்காயக் கலவையைப் போட்டு நன்றாக பிரட்டிக் கலந்து கொள்ளவும்.