சக்கரைவள்ளி கிழங்கு இனிப்பு அடை
0
தேவையான பொருட்கள்:
சக்கரைவள்ளி கிழங்கு - 2
பச்சரிசி மாவு - கொஞ்சமாக
சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கேற்ப
தேங்காய் பூ- 1/2 கப்
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
சக்கரைவள்ளி கிழங்கை கேரட் துருவியில் துருவி கொள்ளவும். தேங்காயை துருவிக்கொள்ளவும். சர்க்கரையுடன் இந்த இரண்டையும் கலந்து பச்சரிசி மாவை சிறிது கலந்து வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து இந்த கலவையை அடைபோல கொஞ்சமாக தோசைக்கல்லில் தட்டவும். அதன் மீது சிறிது நெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்.