கோபி மசால் தோசை
தேவையான பொருட்கள்:
காலிப்ளவர்- 1 சின்ன பூ
தோசை மாவு - 1 கப்
வெங்காயம் - 3
தக்காளி -2
பச்சை மிளகாய் -1
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சிரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கு
செய்முறை:
காலிப்ளவரை உப்பு கலந்த நீரில் 1/2 மணி நேரம் வைத்து பின் சுடுநீரில் பத்து நிமிடம் வைத்திருந்து எடுக்கவும். பின் பொடியாய் நறுக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை,பச்சை மிளகாய் வதக்கவும்
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
பின் தூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறவும்
பொடியாய் நறூக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்
பின் காலிப்ளவரை சேர்த்து நீர் தெளித்து வேகவிடவும்
நீர் வற்றியதும் இறக்கவும்
தவாயில் நெய் தடவி தோசை வார்க்கவும்
ஒரு கரண்டி பூரணத்தை தோசையின் ஒரு பக்கத்தில் வைத்து அரைபக்கம் மட்டும் சமமாக பரப்பவும். அதன் மீது கொத்தமல்லி தூவவும்
பின் தோசையை மடித்து பரிமாறவும்