கோதுமை ரவை உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்

வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

இஞ்சி -1 சிறு துண்டு

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - தாளிக்க

தண்ணீர் - 2 1/2 கப்

எண்ணை - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்,மிளகாய்,இஞ்சி நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி கடு,உளுந்து,கடலைபருப்பு போட்டு,கடுகு வெடித்தவுடன்,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சி போட்டு வதக்கவும்.

21/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதிவந்தவுடன்,ரவையை போட்டு நன்கு கிளறி வேகவிடவும்.ரவை வெந்தவுடன் இறக்கவும்.

குறிப்புகள்: