கோதுமை தோசை (4)
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 3 கப்
சிவப்பு மிளகாய் வத்தல் (கிள்ளிக் கொள்ளவும்) - 4
சின்ன வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1 கப்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொடுத்த பொருட்களை எல்லாம் கலந்து சப்பாத்திக்கும் இல்லாமல் தோசைக்குமில்லாமல் உள்ள பதத்தில் பிசையவும்.
தோசைக்கல்லை சூடு செய்து கையால் மாவை கொட்டி அப்படியே கையாலே வட்டமாக பரப்பி ரொட்டியாக வார்க்கவும். (தேவை எண்ணைய் ஊற்றிக் கொள்ளவும்.). வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சாப்பிடலாம்.
குறிப்புகள்:
சுமாராக 3 கப் மாவிற்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கலாம்