கேரட் பீட்ரூட் உருளை சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
சாண்ட்விச் பாண் துண்டுகள் - 12
கேரட் (துருவியது) - 100 கிராம்
உருளைக்கிழங்கு (அவித்து மசித்தது) - 200 கிராம்
பீட்ரூட் (துருவியது) - 100 கிராம்
சீஸ் (துருவியது) - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
பட்டர் - 100 கிராம்
பச்சை கலரிங் - 1 தேக்கரண்டி
உப்பு தூள் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட்டை ஓரளவு பிழிந்து அதில் பட்டர் (ஒரு தேக்கரண்டி), உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து பிரட்டவும்.
இன்னொரு பாத்திரத்தில் துருவிய கேரட்டை ஓரளவு பிழிந்து அதில் பட்டர் (ஒரு தேக்கரண்டி), உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து பிரட்டவும்.
அவித்து மசித்த உருளைக்கிழங்கை இடியப்ப உரலில் போட்டு ஓரளவு பிழிந்து அதில் பட்டர் பச்சை கலரிங் (ஒரு தேக்கரண்டி), உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து ஓரளவு பிரட்டவும்.
மிகுதியான பட்டரை ஒவ்வொரு பாண்துண்டுகளின் ஒரு பக்கத்திற்கு மட்டும் பூசவும்.
அதன் பின்பு பட்டர் பூசிய பாண் துண்டுகளில் 6 ஜ எடுத்து அதில் ஒவ்வொன்றிற்கும் கேரட் கலவையை வைக்கவும். பின்பு உருளைக்கிழங்கு கலவையை வைக்கவும்.
அதில் பீட்ரூட் கலவையை வைக்கவும். பின்பு துருவிய சீஸ் வைக்கவும்.
அதன் பின்பு மற்றைய பாண் துண்டினால் மூடி சாதுவாக அழுத்தி கொள்ளவும்.
இப்படியே 6 பாண் துண்டுகளுக்கும் செய்யவும். பின்பு அதை ஒரு மணித்தியாலம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்பு அதை எடுத்து மூலைக் குறுக்காக வெட்டி பரிமாறவும்.