கேக் பணியாரம்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்

முட்டை - 2

காய்ச்சிய பால் - 1/2 கப்

சீனி - 1/2 கப்

வெண்ணெய் - 50 கிராம்

வெனிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி

நெய் அல்லது எண்ணெய் - பொரிப்பதற்க்கு தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும்,சீனியையும் போட்டுஅடித்துக்கொள்ளவும்.

சீனி கரைந்து வெள்ளையாக வந்ததும் முட்டைகளை ஊற்றி முட்டை அடிக்கும் கருவி கொண்டு 2 நிமிடம் அடிக்கவும்

அடுத்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, பாலையும் ஊற்றி கலக்கவும்

மாவு கேக் மாவு போன்று வந்ததும் எஸன்ஸ் கலந்து ரெடியாக வைத்துக்கொள்ளவும்.

ஒரு குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து , அதன் குழிகளில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய குழி கரண்டியில் மாவை எடுத்து ஒவ்வொரு குழியாக ஊற்றவும்.

அடுப்பை சிம்மில் எரிய விடவும்

ஒரு புறம் சிவந்ததும் பணியாரங்களை திருப்பி விட்டு எடுத்து விடவும் கேக்கின் சுவையுடன் உள்ள இந்த பணியாரம் பத்து நிமிடங்களில் தயாராகிவிடும்

குறிப்புகள்: