கிழங்கு ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 450 கிராம்

பட்டர் - 50 கிராம்

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

உருளைக்கிழங்கு - 250 கிராம்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - கொஞ்சம்

கடுகு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப

மிளகு தூள் - காரத்திற்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பட்டர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, அதன்மேல் சிறிது எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும். பிறகு தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அதனுடன் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி நன்கு கலந்து மசாலாவைத் தயார் செய்து கொள்ளவும்.

பிசைந்த மாவில் சிறிய உருண்டை அளவு எடுத்து பூரி போல இட்டுக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, கலவை வெளியில் தெரியாதவாறு மூடி உருண்டையாக்கி, பிறகு மீண்டும் அதை பூரி போல சற்று மொத்தமான ரொட்டியாக கைகளால் தட்டிக் கொள்ளவும்.

தவாவை சூடாக்கி எண்ணெய் தடவி அதில் தயார் செய்த ரொட்டிகளைப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். (தனித்தனியாக வேகவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு முறையும் இதேபோல் மூன்று ரொட்டிகளைப் போட்டு வேகவிடலாம்).

சூடாகப் பரிமாற சுவையான கிழங்கு ரொட்டி தயார்.

குறிப்புகள்: