கார சப்பாத்தி (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 4 டம்ளர்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
நெய் (அல்லது) எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கப் மாவுக்கு 2 கப் தண்ணீர் சேர்க்கவும். முதலில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். நீர் கொதி வந்ததும் உப்பு, மிளகாய் தூள் போட்டு மாவையும் கொட்டி 5 நிமிடம் கிளற வேண்டும்.
சப்பாத்தி மாவு பதம் வந்தவுடன் சிறிதாக உருண்டையாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும். பிறகு தோசை கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுத்து வைக்கவும்.